தாய்லாந்து நாட்டின் நக்கோன் ராட்சாசிமா பகுதியில் இன்று காலை ஒரு கோரமான ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ரயில்வே கட்டுமானப் பணியின் போது, எதிர்பாராத விதமாக ஒரு பிரம்மாண்டமான கிரேன் தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த பயணிகள் ரயிலின் மீது சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் ரயிலின் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இதில் பயணம் செய்தவர்களில் 22 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

​மேலும், இந்த விபத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தாய்லாந்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.