நாடு முழுவதும் ஏராளமான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஏனெனில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் வசதியாக இருப்பதோடு கட்டணமும் குறைவு. இதன் காரணமாக தினசரி இலட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்லும் நிலையில் பொதுமக்கள் வசதிக்காக ரயில்வே நிர்வாகமும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு குறைந்த விலையில் போர்வை மற்றும் தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் திட்டத்தினை தெற்கு ரயில்வே தொடங்க இருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 10 ரயில்களில் ஜனவரி 1ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே இந்த திட்டத்தை தொடங்குகிறது. மேலும் அதன்படி போர்வை 20 ரூபாய்க்கும், தலையணை 30 ரூபாய்க்கும், போர்வை மற்றும் தலையணை 50 ரூபாய்க்கும் வழங்கப்பட இருக்கிறது.