ஒடிசா மாநிலம், திட்லகர் ரயில்வே நிலையம். அங்கு RPF அதிகாரிகள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆறு இளைஞர்களை கைது செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை சோதித்த போது கஞ்சா கடத்தியது தெரிய வந்தது இதை அடுத்து அவர்கள் உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 22.92 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கஞ்சாவின் மதிப்பு 2.22 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது. சமூக ஊடகத்தில் வைரல் ஆன வீடியோவில், போலீசார் குற்றவாளிகளின் சட்டையை கழற்றி, உடலில் கட்டப்பட்டிருந்த கஞ்சா பைகளை வெளியே எடுக்கும் காட்சி தெரிகிறது. இந்த கைது சப்-இன்ஸ்பெக்டர் வினய் குமார் போய் தலைமையில் நடந்தது.