ரயில்வே துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ரயில்வே வேலைவாய்ப்பு தொடர்பான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டெக்னீசியன் பணியிடங்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் இடையே நிரப்பப்படும், பாரா மெடிக்கல், ஜூனியர் இன்ஜினியர்கள், இளங்கலை நிலை 2,3, தொழில்நுட்பம் அல்லாத பட்டதாரி நிலை 4,5,6, நிலை ஒன்று, அமைச்சர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு பணியிடங்கள் அக்டோபர் முதல் டிசம்பர் இடையே நிரப்பப்படும்.

உதவி லோகோ பைலட் வேலைகளுக்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் விண்ணப்பத்தாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.