இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி போட்டி கொண்டு பல சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன்படி ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கான சிறப்பு சலுகைகளை வழங்குகின்றது. குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கக்கூடிய பல திட்டங்கள் உள்ளன.

ஏர்டெல்:

28 நாட்களுக்கு செல்லுபடி ஆகக்கூடிய திட்டத்தில் அன்லிமிடெட் கால் வசதியுடன் இரண்டு ஜிபி டேட்டா, 300 எஸ் எம் எஸ், ஹலோ டியூன்ஸ், wynk music ஆகியவை வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா:

28 நாட்கள் செல்லுபடி ஆகும் இதில் அன்லிமிடெட் கால் வசதி, 2 ஜிபி டேட்டா, 300 எஸ் எம் எஸ், 200க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் மற்றும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பீம் மூவிஸ் அண்ட் டிவி ஆப் வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ:

இந்த திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் நிலையில் அன்லிமிடெட் கால் வசதியுடன் நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. மேலும் 100 sms, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

மேலும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது ரிலையன்ஸ் ஜியோ மாதத்திற்கு 22 ஜிபி டேட்டாவை அதிகமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.