ரயில் நிலையங்களில் பயணம் செய்யும்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு பதறவைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள அந்த ஆபத்தான இடைவெளியில் சிக்கிக்கொண்டார்.
மேலும் நொடிப் பொழுதில் உயிர் போகும் நிலையில் இருந்த அந்தப் பெரியவரை, அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வெளியே இழுத்துக் காப்பாற்றினார். இந்த ஒட்டுமொத்தப் பயங்கரமான காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களின் நெஞ்சத்தை அதிரச் செய்துள்ளது.
मुंबई कुरला स्टेशन पर देवदूत बना टीसी, बचाई बुजुर्ग यात्री की जान pic.twitter.com/UdEuEeb8kM
— आजाद भारत का आजाद नागरिक (@AnathNagrik) February 11, 2026
“>
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிரும் பலரும், அந்த டிக்கெட் பரிசோதகரின் துணிச்சலையும் சமயோசித புத்தியையும் பாராட்டி வருகின்றனர். சரியான நேரத்தில் அவர் செயல்படவில்லை என்றால் ஒரு உயிர் பிரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அந்த வீரரை “நிஜ நாயகன்” என்று கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ முயற்சிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு பாடம் என்றும், அவசரத்தை விட உயிரே மேலானது என்றும் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
