தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. .இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தையடுத்து ரஜினி, ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் ரஜினிக்கு வில்லனாக ஃபஹத் பாசில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ராணா, நடிகை துஷாரா விஜயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.