நடிகர் ரஜினி எப்போதும் வாக்கு செலுத்தும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.