ரஜினிகாந்த் படங்கள் என்றால், அதை வீட்டில் இருக்கும் எல்லோரும் சேர்ந்து பார்ப்பார்கள். தாத்தா, பாட்டி முதல் சிறிய குழந்தைகள் வரை ரஜினியை விரும்புவார்கள். சமீபத்தில் வெளியான ‘படையப்பா’ ரீ-ரிலீஸைப் பார்க்க, ஒரு சின்ன குழந்தை ரஜினி போலவே உடை அணிந்து வந்த வீடியோவே இதற்குச் சாட்சி. குழந்தைகளும் ரஜினி படங்களைத் தடையின்றிப் பார்க்க வேண்டும் என்றுதான் ரசிகர்கள் விரும்புவார்கள்.

​ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்திற்கு, ‘A’ சான்றிதழ் (பெரியவர்கள் மட்டும் பார்க்க வேண்டும்) வாங்கப்பட்டது. இது ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது. இதனால் ரசிகர் ஒருவர் “ரஜினியின் ரசிகர் வட்டம் உங்களுக்குத் தெரியாதா? ‘கூலி’ படத்திற்கு ‘A’ சான்றிதழ் வாங்கிய உங்களை மன்னிக்க முடியாது” என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.