பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படும் நிலையில், போட்டியாளர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீது வைத்த விமர்சனம் எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கானா வினோத், FJ அமித் பார்கவ் ஆகிய மூன்று போட்டியாளர்களும் இணைந்து, நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Finally.. the contestants opens up on the dumb hosting 👏👏👏 The main reason why this season is big failure 🤡 #BiggBossTamil9 #BiggBoss9Tamil #BiggBossTamil pic.twitter.com/DrQ43XBkKB
— Deepu (@deepu_drops) December 15, 2025
இந்த நிகழ்ச்சியின் பெரிய தோல்விக்கு, விஜய் சேதுபதியின் “டம்ப் ஹோஸ்டிங்” (யோசனை இல்லாத தொகுத்து வழங்கும் முறை) தான் காரணம் என்று போட்டியாளர்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளனர். மேலும், “விஜய் சேதுபதி எது பேசினாலும், உட்காரு என்று கூறி, எங்களை முழுமையாகப் பேசவிடாமல் தடுத்துவிடுகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விமர்சனம், பிக் பாஸ் ரசிகர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
