தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு பிடித்த சீரியல் குறித்து தற்போது ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது சன் டிவியில் பல வருடங்களுக்கு முன்பு தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் ரஜினிக்கு மிகவும் பிடிக்குமாம். இந்த சீரியலில் ரஜினியின் நண்பர் நடராஜ் நடித்தார்.

அவரிடம் சீரியலை பற்றி ரஜினி புகழ்ந்து பேசியதோடு இயக்குனர் திருசெல்வத்தையும் நேரில் அழைத்து  பாராட்டியுள்ளார். அவரிடம் தனக்கு கோலங்கள் சீரியல் மிகவும் பிடிக்கும் என்றும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த சீரியலை பார்த்து வருகிறேன் என்றும் ரஜினி கூறியுள்ளார். மேலும் இயக்குனர் திருச்செல்வம் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.