தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் திரிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்ஜுன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இதனிடையே அஜித் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது.

அந்த வீடியோவில் அஜித் ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்து அவர் எடுத்த வீடியோக்களை நீக்கி உள்ளார். ஆனால் அஜித் செய்ததை மற்றொருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரடாகி வரும் நிலையில் எப்போதும் ரசிகர்களுக்கு புகைப்படம் எடுக்க நேரம் ஒதுக்கும் அஜித் இப்படி செய்வதில் ஏதாவது நியாயம் இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.