வட கொரியா அணு ஆயுத நாடு. இது தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. வடகொரியா அதிபர் ஆன கிம் ஜான் உன் ரஷ்யா உடன் நெருக்கம் காட்டி வருகிறார். அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் வடகொரியா பொருளாதார பாதிப்பை சந்தித்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் தற்போது சீனாவும் ரஷ்யாவும் வடகொரியாவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
சமீபத்தில் தென் கொரியாவை எதிரி நாடாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அது மட்டும் இல்லாமல் அமெரிக்காவுக்கு ஆணு ஆயுத மிரட்டல் விடுத்தது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக மறைமுகமாக நடந்து வரும் உக்கிரன் போரில் வடகொரியா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் மட்டும் இன்றி அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. உக்கிரனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவும் பொருட்டு வடகொரியா 12,000 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. இதனை தென் கொரிய உலக அமைப்பு கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
