நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பையின் புறநகர் பகுதியான வசாயில், பெரியவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 4 வயது சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசாய் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் விக்னேஷ் என்ற 4 வயது சிறுவன் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சந்தீப் பவார் என்பவருக்கும், சிறுவனின் தந்தைக்கும் இடையே சிறு காரணத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தந்தையுடன் ஏற்பட்ட கோபத்தை சிறுவன் மீது காட்டிய சந்தீப் பவார், ஆட்டோவில் விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷின் கால்களைப் பிடித்து வெளியே இழுத்து, ஆவேசமாக தரையில் வீசினார். அத்துடன் நில்லாமல், அச்சிறுவனைத் தூக்கிக்கொண்டு கட்டிடத்தின் உள்ளே சென்ற அந்த நபர், அங்குள்ள இரும்பு கம்பியின் மீது சிறுவனைத் தூக்கி வீசி மீண்டும் தாக்கியுள்ளார்.
SENSITIVE VIDEO
నాలుగేళ్ల చిన్నారిపై అమానుషంమహారాష్ట్రలో దారుణం చోటుచేసుకుంది. ముంబైలోని ఓ హౌసింగ్ సొసైటీలో పాత కక్షల నేపథ్యంలో సందీప్ పవార్ అనే వ్యక్తి నాలుగేళ్ల చిన్నారి విఘ్నేశ్పై అమానుషంగా దాడి చేశాడు. బాలుడిని ఆటోలో నుంచి లాగి, తలను నేలకేసి బాదడంతో పాటు ఇనుప రాడ్డుతో… pic.twitter.com/8cZ5rcHe7X
— ChotaNews App (@ChotaNewsApp) March 31, 2026
இந்தக் கொடூரமான காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அந்த நபரை “ராட்சதன்” என கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவன் விக்னேஷ், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தற்போது சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவனது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், குற்றவாளி சந்தீப் பவாரைக் கைது செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “பெரியவர்களுக்கு இடையிலான சண்டையில் எவ்வித தொடர்பும் இல்லாத பச்சிளம் குழந்தையை இப்படி இரக்கமில்லாமல் தாக்கியவருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளனர்.
