சித்திப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவலர் பிரவீன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஸ்வர ராவ் என்பவரைக் கடத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடன் தொல்லையைத் தீர்க்க, பிரவீன் தனது நண்பரான வெங்கடேஸ்வர ராவிடம் பணம் கேட்டுள்ளார்.

அவர் தர மறுத்ததால், நிலம் காட்டுவதாக ஆசை காட்டி வெங்கடேஸ்வர ராவை காரில் அழைத்துச் சென்று, வழியிலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க உடலைத் தகனம் செய்ய முயன்றபோது, போலீசாரின் ரோந்துப் பணியால் பயந்துபோன தம்பதியினர் அங்கிருந்து தப்பியோடினர்.

ஆனால், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த காவலர் பிரவீன் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்தனர். கடனை அடைக்கத் திட்டமிட்டு ஒரு காவலரே தனது நண்பரைக் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.