இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் யூபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேலும் மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட விதி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதாவது பயனர்கள் தவறுதலாக வேறொரு பயனருக்கு பணத்தை அனுப்பினால் நான்கு மணி நேரத்திற்குள் அதனை திரும்ப பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.