இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்திய குடிமக்களுக்கு தனித்துவ 12 இலக்க எண்களுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரி போன்ற குடிமக்களின் அனைத்து வித தகவல்களும் பதிவு செய்யப்பட்டு மற்ற அனைத்து ஆவணங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் அட்டையை வைத்துக் கொண்டு ஒரு நபரின் அனைத்து வித தகவல்களையும் அரசு அறிய முடியும். ஆதார் பதிவு மையத்தில் கைரேகை மற்றும் கண் கருவிழி போன்றவை பதிவு செய்யப்பட்டு பயோமெட்ரிக் தகவல்கள் உள்ளிடப்படுகின்றன.

இந்த நிலையில் பயோமெட்ரிக் விவரங்கள் இல்லாத நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மதிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் இதுவரை 29 லட்சம் பேருக்கு பயோமெட்ரிக் தகவல்கள் இல்லாமல் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். இத்தகைய சிறப்பு நிலையில் குடிமக்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் கிடைக்க கூடிய பயோ மெட்ரிக் விவரங்களை உள்ளிட வேண்டும். கிடைக்காத பயோமெட்ரிக் விவரங்களின் பதிவு மென்பொருளில் உள்ளிடப்பட வேண்டும் எனவும் கைரேகை மற்றும் கருவிழி இரண்டின் புகைப்படங்களையும் எடுத்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது