பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு தரப்பில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என ஒரு வருடத்தில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக விவசாயிகளுடைய வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 15வது தவணை சுமார் எட்டு கோடி விவசாயிகளுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து 16 ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் பண உதவியை அதிகரிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி 4 தவணைகளில் செலுத்த அரசு யோசித்து வருவதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இது குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும் என்று தெரிகிறது.