இந்தியாவில் தற்போது 60க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் துறையில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சென்னை -கோவை, சென்னை – நெல்லை, சென்னை – பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய வழித்தடங்களில் மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.

சமீபத்தில் கோவை மற்றும் பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த நிலையில் வந்தே பாரத் திரையில் அடுத்த கட்ட வசதியாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக ராஜஸ்தான் மாநிலம் சோத்தூரில் இருந்து டெல்லி மற்றும் பொம்மை வழிதடத்தில் ஸ்லீப்பர் வந்தே பாரத் இயக்கப்படும் என்றும் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.