2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், UPSC தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக தேர்வு நடத்தப்படும்.

UPSC முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் இந்த  திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்  ஜூன் 28 வரை https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration என்ற இணையதளத்தின்  மூலம் விண்ணப்பிக்கலாம்.