மெக்சிகோவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் நபர்களை ஒரு மர்ம நபர் அல்லது மர்ம கும்பல் பிடித்து, பொது இடங்களில் மின் கம்பங்களில் வைத்து, அவர்கள் செய்த குற்றத்தை போஸ்டராக எழுதி ஒட்டிச் செல்லும் விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கி இதுவரை சுமார் 5 பேர் இதே போல மின் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் மக்கள் இந்த மர்ம நபரை ‘மெக்சிகோவின் பேட்மேன்’ என்ற சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

 

“>

இதற்கிடையில், இந்தச் சம்பவங்களின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், யாரும் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கட்டப்பட்ட நபர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் இன்று நிரூபிக்கப்படாததால், அவர்கள் தற்பொழுது பாதிக்கப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள் என்று அரசு வழக்கறிஞர் தெரிவிக்கின்றனர். இந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.