பிரபல இசையமைப்பாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஜேம்ஸ் வசந்தன் முன்வைத்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியிருந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் இன்று மதியம் அவர் ஒரு உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த நேரத்தில், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் கண்ணாடி சமூக விரோதிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் மிகுந்த ஆத்திரமடைந்த ஜேம்ஸ் வசந்தன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் அதில், “இது தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை” என்று கடுமையாகச் சாடியுள்ளார். கருத்து சுதந்திரத்திற்கு எதிராக வன்முறையைக் கையில் எடுக்கும் இத்தகைய செயல்களுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தனது கருத்தியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்குமாறு அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.
