மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, அங்கிருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இதுவரை சுமார் 67,000 இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வான்வழிப் போக்குவரத்து பகுதியளவு திறக்கப்படும் நேரங்களைப் பயன்படுத்தி, சிறப்பு விமானங்கள் மற்றும் கூடுதல் வணிக ரீதியிலான விமானங்கள் மூலம் இந்த மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வாழும் வளைகுடா நாடுகளில் நிலவும் சூழலை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பிற்கே தங்களது முதல் முன்னுரிமை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.