திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் எதிரே இருக்கும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.