தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி குடியரசு தினத்தன்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.

இது தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 42 உணவகங்கள், 78 கடைகள், 9 பீடி நிறுவனங்கள், 11 மோட்டார் நிறுவனங்கள் உட்பட 140 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 99 நிறுவனங்களில் விதிமீறல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.