நியூயார்க்கின் ஆடம்பர விழாவாக கருதப்படும் மெட் காலா 2024, மே 6 ஆம் தேதி தொடங்குகின்றது. ஃபேஷன் அடையாளமாக கருதப்படும் விஐபிகள் இதில் கௌரவிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு இந்தியாவின் ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பார்வையாளர் டிக்கெட் ஒன்று 50,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் 40 லட்சத்திற்கு விற்றுள்ளது. அதேபோன்று முழு பார்வையாளர் டேபிளுக்கு இரண்டு கோடி செலுத்த வேண்டும்.