புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கவேல் தனது வீட்டிற்கு வந்த உறவினர் விஜயகுமாரை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது வீர சேகர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு வீரசேகரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.