மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசியவற்றை அடிப்படையாகக் கொண்டு முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழரை பிரதமராக ஆக்க போகிறேன் என்று சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.

மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024 இல்பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தமிழிசை இருக்கிறார்கள், முருகன் இருக்கிறார் ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.