இந்தி திணிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “தமிழுக்கு பதிலாக இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம். மேலும் மத்திய அரசில் இந்திக்கு வழங்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம். நாட்டின் பன்முகத்தன்மையை நம்புகிறோம். நம்முடைய மொழிகள் சமமாக நடத்தப்படவேண்டும். இதற்கிடையில் இந்தியை திணிப்பதற்காக தங்களது மதிப்புமிக்க வளங்களை செலவழிக்க மத்திய அரசானது குறியாக உள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்கின்றனர். ஆனால் மக்கள் நலனுக்காக இல்லாமல் இந்தியை திணிப்பதிலேயே ஒன்றிய அரசு குறியாக உள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.