தமிழ்நாட்டில் நூற்றாண்டு பெருமைமிக்க சிறப்புமிக்க பத்திரிக்கை குழுமம் விகடன். இதன் இணையதளத்தை நேயர்கள் படிக்க மற்றும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது விகடன் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பிரதமர் மோடி பற்றி ஒரு கார்டூனை விகடன் இணையதளம் வெளியிட்டு இருந்த நிலையில் அது அவரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து விகடன் இணையதளத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் கூட எழுதி இருந்தார்.

இது பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விகடன் இதுவரை மத்திய அரசு விகடன் இணையதளத்தை முடக்கியதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் பல இடங்களில் நேயர்கள் விகடன் இணையதளத்தை பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். பல நூற்றாண்டுகளாக விகடன்கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் ஒருவேளை மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால் சட்டப்படி அந்த பிரச்சனையை எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளனர். இதற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடன்  இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.