தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது பாஜக விஜயை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவே பாதுகாப்பு வழங்கியதாக சிலர் விமர்சிக்கும் நிலையில் பாஜக அண்ணாமலை நடிகர் விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலின் படி தான் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகி மற்றும் நடிகை குஷ்புவிடம் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் கூறியதாவது, நடிகர் விஜய் சினிமா துறையில் மிகப்பெரிய நடிகராக இருக்கும் நிலையில் அவருக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு என்பது நிச்சயம் தேவை. தற்போது அவர் அரசியலில் இருப்பதால் ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறினார்.
