மோடிக்கும் பயப்பட மாட்டோம் ED – க்கும் பயப்பட மாட்டோம், ஒன்பது வருடத்தில் பாஜக மக்களுக்கு செய்தது என்ன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவால் வளர்ந்தது ஒரே குடும்பம் தான். அதுதான் அதானி குடும்பம். ரயில்வே, விமான சேவை மற்றும் ஸ்டேடியம் என அனைத்தையும் அதான இடம் ஒப்படைத்து விட்டனர். நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் ED – க்கும் பயப்பட மாட்டோம். தமிழ்நாடு என்ற வீட்டினுள் பாஜக என்ற விஷப்பாம்பு நுழைய பார்க்கிறது. அதனை அடித்து விரட்ட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.