தமிழகத்தில் முக்கியமான சிவ தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி ஆவணி மாத பௌர்ணமி இன்று வரும் நிலையில் இன்றைய தினம் காலை 10.58 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 31 காலை 7.05 மணி வரை கிரிவலம் வர நல்ல நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 130 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து 300 சிறப்பு பேருந்துகளும், வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 30 சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்து சேவையை பக்தர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.