தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ஆயிரம் உதவி தொகை திட்டம் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதியில் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.63 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்குவதற்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விண்ணப்பத்தை சரிபார்க்கும் பணியானது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த மாத இறுதிக்குள் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த உரிமை தொகையை பெற தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் மேல்முறையீடு செய்யவும் குடும்ப தலைவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திட்டம் அமலாவதற்கான நாட்கள் மிகவும் குறுகிய நிலையில் வங்கி கணக்கு இல்லாத குடும்பத்தலைவிகளுக்கும் ஆயிரம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் வீட்டிற்கு கள ஆய்வு மேற்கொண்டால் குடும்பத் தலைவிகள்  ஒத்துழைக்கும் படியும் அறிக்கை விடப்பட்டுள்ளது .இந்த நிலையில் நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதால் அடுத்த 17 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டு விடுமா எனவும் ஆயிரம் உரிமை தொகை  தேதி தள்ளி வைக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, மகளிர் உரிமைத்துறை தொகை திட்டம் திட்டமிட்டபடி செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று தொடங்கப்படும் என்றும், தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை அரசால் கட்டாயம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். முதல்வரும் இது குறித்து பேசும் போது தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.