இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இது ஒரு பக்கம் பயனளித்தாலும் மறுபக்கம் சில மோசமான விளைவுகளையும் ஏற்படுகிறது. இதனால் இந்திய குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்ய மொபைல் போன் பயன்படுத்தும் அனைத்து பயனாளிகளுக்கும் தனித்துவமான அடையாள எண்ணை வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐடி மூலமாக ஒவ்வொரு பயனடையும் எத்தனை மொபைல்கள் மற்றும் சிம் கார்டுகள் வைத்துள்ளனர் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.

பயனரின் அனைத்து தகவல்களும் இதில் கிடைக்கும். ஒரு புதிய சிம் கார்டை நீங்கள் வாங்கும் போது மத்திய அரசின் புதிய அடையாள எண் உங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலமாக ஸ்பேம் அழைப்புகள் மற்றும் டிஜிட்டல் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். அதே சமயம் மொபைல் போன் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும் வழங்குவதால் கூடிய விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.