மொபைல் போன்களில் எப்எம் ரேடியோ வசதி இருக்க வேண்டும் என்று போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவசர நிலைகள்,பேரிடர்கள் மற்றும் விபத்துகளின் போது எப்எம் ரேடியோ சேவைகள் இன்றியமையாததாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

மொபைல் போன்களில் எஃப் எம் ஐ செயலிழக்க செய்யக்கூடாது என்றும் கார்களில் ஸ்மார்ட் ஃபோன்கள் மட்டும் இன்றி தனியாக ரேடியோ மற்றும் ரேடியோ ரிஷிவர்களும் தேவை என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் வானொலிகள் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.