மும்பையின் உணவு உலகம் தொடர்ந்து புதுமைகளை முயற்சித்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஒரு கண்டுபிடிப்பு இணையத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மீரா பயந்தரில் உள்ள ‘தி சாம்பார் ஸ்டோரீஸ் கஃபே’ (The Sambar Stories Cafe) என்ற உணவகம், பிரபலமான தென் இந்திய இனிப்பான மைசூர் பாகை வைத்து செய்த ‘மைசூர் பாக் பால்’ என்ற புதிய பானத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.
“கேரளாவின் பிரபலமான மைசூர் பாக் பால் இப்போது மும்பையில்” என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட இந்தக் காணொளி, பாரம்பரிய இந்திய இனிப்புகளைப் பானங்களாக மாற்றும் ஆன்லைன் டிரெண்டைப் பயன்படுத்தி உள்ளது. நெய் நிறைந்த மைசூர் பாகை, பால் மற்றும் ஏலக்காய், நட்ஸ் போன்ற சுவையூட்டிகளுடன் கலந்து தயாரிக்கப்படும் இந்த பானம் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் தற்போது பிரபலமாக உள்ளது.
View this post on Instagram
“>
ஆனால், மும்பை உணவுப் பிரியர்களுக்காக கஃபே அறிமுகப்படுத்திய இந்த முயற்சி சமூக ஊடகப் பயனர்களைக் கவரவில்லை. இந்தக் காணொளியில், அடர்த்தியான, பொன்னிற மைசூர் பாக் துண்டு சூடான பாலில் கரைந்து இனிப்புப் பானமாக மாறுகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் “ஐயோ, தயவுசெய்து இந்த இனிப்பை வீணாக்க வேண்டாம்” என்றும், “மைசூரில் பிறந்து மும்பையில் இறந்துவிட்டது” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
