பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற மே மாதம் இரண்டாம் தேதி முதல் அலுவலக நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது மாநில அரசு துறைகளில் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகின்றது. இந்நிலையில் மே இரண்டாம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அலுவலக நேரம் ஜூலை 15ஆம் தேதி வரை கமலில் இருக்கும். கோடை காலத்தில் அலுவலக நேரம் மாற்றம் மின் தேவையின் சுமையை குறைக்கும். பகலின் வெப்பமான காலநிலையின் உச்ச நேரம் தொடங்குவதற்கு முன்பு அரசு அலுவலகங்களில் தங்கள் வேலையை செய்து முடிப்பதால் இந்த முடிவு சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.