மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு கண்டிப்பாக உற்சாகம் ஏற்படக்கூடும். செய்கின்ற செயலில் முன்னேற்றம் ஏற்படும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். வாய்ப்புகளை பிரகாசமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரம் முன்னேற்றத்திற்கு புதிய ஆலோசனைகளும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

புதிய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கருத்து மோதல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். மனம் சந்தோசமாக காணப்படும். எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டு மழையில் நனைவீர்கள்.

இன்று பெண்களுக்கு எந்த விஷயத்திலும் வெற்றி இருக்கும். சிந்தனை ஒருநிலைப்படும். சிந்தித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். இன்று மாணவர்களுக்கு முற்போக்கான சிந்தனை வெளிப்படும். முழு முயற்சியால் வெற்றி பெற முடியும். புது புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்