ஆன்டிவைரஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனமாக திகழும் MCAFEE நிறுவனம் தன்னுடைய குளோபல் ஸ்கேன் மெசேஜ் குறித்து ஆய்வை சமீபத்தில் நடத்திய நிலையில் அந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களுடைய whatsapp மற்றும் மொபைல் எண்ணுக்கு வரும் செய்தியில் குறிப்பிட்ட ஏழு செய்திகளை மட்டுமே கிளிக் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் பரிசை வென்று உள்ளீர்கள், வேலை வாய்ப்பு அல்லது சலுகை குறித்த போலி அறிவிப்பு, யூ ஆர் எல் உடன் வரும் வங்கி எச்சரிக்கை லிங்குகள், நீங்கள் வாங்காத பொருள்களுக்கான தகவல்கள், நெட் பிளிக்ஸ் அல்லது மற்ற ஓடிடி சந்தாக்களுக்கான புதுப்பிப்பு, நீங்கள் தவறவிட்ட டெலிவரி அல்லது டெலிவரி சார்ந்த செய்திகள், அமேசான் அல்லது மற்ற வணிக நிறுவன செய்திகளுக்கான புதுப்பிப்புகள் போன்ற அறிவிப்புகளை எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது