வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி நாராயணமூர்த்தியின் கூற்றுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரியால் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா வல்லரசு நிலைக்கு ஏற வேண்டுமானால், வேலை செய்யும் நடைமுறைகளில் குறைந்தபட்சம் மாற்றம் தேவை என்று திவாரி கூறியுள்ளார்.

வாரத்தில் ஒரே ஒரு நாள் விடுமுறை, ஆண்டுக்கு 15 நாள் சுற்றுலா விடுமுறை என தங்களது வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், குறைந்தது 2 தலைமுறையாவது இதை மேற்கொண்டால் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அது உதவும் என தெரிவித்துள்ளார்.