அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதியற்றவர் என கொலாராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் தான் பொறுப்பில் இருந்தால் மூன்றாம் உலகப்போரை தடுக்க முடியும் என கூறியுள்ளார் ட்ரம்ப்.

ஜோ பைடனின் வெளியுறவு கொள்கைகளை குற்றம் சாட்டும் டிரம்ப் அணுசக்தி போர் நடைபெறுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார். அதோடு ஹங்கேரி பிரதமர் விக்டர் ட்ரம்ப் பிரதமராக இருந்திருந்தால் ஐரோப்பாவிலும் உக்ரைனிலும் போர் நடந்திருக்காது என்று கூறியதை சுட்டி காட்டியுள்ளார்.

மேலும் மூன்றாம் உலகப்போரானது ராணுவங்களுக்கிடையேயானதாக மட்டும் இல்லாமல் உலகையே அழித்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.