மூத்த நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார். டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கங்கா. அதன் பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகி தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நடிகர் கங்கா காலமானதால் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.