பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை இன்று காலமானார். 53 வயதாகும் இவர் பல விருதுகளை குவித்த மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் தேன் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.