தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா நடித்திருந்த நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் லியோ திரைப்படம் உலக அளவில் 600 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. முதல் நாளில் 148 கோடி, ஏழு நாளில் 461, 12 நாளில் 520 கோடி, வெளிநாடுகளில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து தீபாவளியையும் தன் வசப்படுத்தியது. இதன் மூலம் அதிக வசூல் பெற்ற விஜய் படங்களில் லியோ முதலிடத்தை பிடித்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.