சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஸ் பாகேலின் தந்தை காலமானார். பூபேஷ் பாகேலின் தந்தை நந்த் குமார் பகோல் (89) மருத்துவமனையில் இன்று காலமானார். இவர்களது மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.