மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா திருவுருவப்படத்துக்கு ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் அவருடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதேசமயம் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.