சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் இன்று காலை காலமானார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இவர் 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக பதவி வகித்திருந்தார். 68 வயதாகும் இவர் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் விடுமுறையை கொண்டாட ஹாங்காய் சென்று இருந்த போது உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.