பெருநாட்டில் முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது “இந்த 30 கல்லறைகளும் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை ஆகும்.

மேலும் இதன் மூலம் சான்கே கலாச்சாரத்தை பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடியும். பெருநாட்டின் மத்திய பள்ளத்தாக்கு பகுதிகளில் 1000 முதல் 1500 ஆம் ஆண்டு வரை சான்கே மக்கள் வாழ்ந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் சான்கே கலாச்சாரத்தை பற்றி 2000-க்கும் மேற்பட்ட அகழாய்வு சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.