துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் நொடிப்பொழுதல் சரிந்து விழுந்துள்ளது. இதனால் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த அதிகப்படியான உயிர் சேதத்திற்கு அந்நாட்டின் தரை குறைவான கட்டுமானமே காரணம் என கட்டிடவியல் நிபுணர்கள் பொதுமக்களும் குற்றம் சாட்டி உள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு நாட்டின் கட்டுமான விதி படியும் நிலநடுக்கத்தை எதிர்கொள்வதற்கான பொறியியல் தர அளவு பின்பற்ற வேண்டும்.

இந்த விதிமுறையை சரியான வகையில் அமல்படுத்தினால் இவ்வாறான அதிகப்படியான உயிரிழப்புகள் இருந்திருக்காது.ஆனால் அதனை சரியான படியில் அமல்படுத்தாமல் இருந்ததாலேயே ஊழல் செய்து கட்டுமான பணிகளை மேற்கொண்டதாலேயே ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பறிபோய் உள்ளது. இந்த ஊழல் குறித்து அந்நாட்டின் நீதித்துறை விசாரித்து வருகின்றது. இது தொடர்பாக இதுவரை 184 கட்டிட ஒப்பந்தக்காரர்களும் கட்டிட உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 600க்கும் அதிகமானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் அதிகமானோரை கைது செய்ய துருக்கி அரசின் நீதித்துறை பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.